துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வாய்ப்பு இன்னும் சில தசாப்தங்களுக்கு இல்லை: கேமரன்

  • 12 ஜூன் 2016

துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வாய்ப்பு இன்னும் சில தசாப்தங்களுக்கு இல்லை என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இந்த மாதத்தில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்பவர்கள், துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் பிரிட்டனுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.

ஆனால் கேமரன் இது குறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில், தற்போதைய முன்னேற்ற விகிதப்படி துருக்கி 3000 ஆம் ஆண்டிற்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இயலாது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வாதம் மக்களை அச்சுறுத்தும் தந்திரமாக பயன்படுத்தப்படுகிறது ஆனால் அது நடக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.