ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகினால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கும் - கேமரன்

இந்த மாதத்தின் கடைசியில் நடைபெறும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவிட வாக்களித்தால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கிவிடும் என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கும் - டேவிட் கேமரன்

சுகாதாரம், ஓய்வூதியம் போன்வற்றில் செலவிடும் தொகை இதனால் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த எச்சரிக்கை தற்போதைய நிலையை சரியென காட்டுகின்ற, ஓய்வூதியம் பெறுவோரை பயமுறுத்தும், திகிலூட்டும் கடைசி முயற்சி என்று பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று பரப்புரை மேற்கொண்டு வரும் கேமரன் அரசில் இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் டன்கன் ஸ்மித் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் சுகாதாரம், ஓய்வூதியம் போன்றவற்றின் செலவு தொகை பாதிக்கப்படும்

இந்நிலையில், தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற “அமைதி மற்றும் இணக்கம்” என்ற தொலைநோக்கு பார்வையோடு ஐரோப்பிய ஒன்றியம் நிறுவப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் காண்டர்பெரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தாடு இணைந்திருக்க வேண்டும் என்று தான் வாக்களிக்க போவதாக தெரிவித்துள்ளார்.