யுக்ரைன் தலைநகரில் ஒரு பாலுறவுக்காரர்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணி

  • 12 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Getty

யுக்ரைன் தலைநகரான கியஃப்பில், பல நூற்றுக்கணக்கானவர்கள் பலத்த பாதுகாப்பின் கீழ், நாட்டின் மூன்றாவது ஒரு பாலுறவுக்காரர்களின் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty

அங்கு இருந்த பிபிசி செய்தியாளர், மேளங்கள் மற்றும் கோஷங்களால் இது ஒரு வண்ணமையான நிகழ்வாக இருந்ததாகவும், ஒரு பாலுறவுக்காரர்களின் உரிமைகளை கோரும் வகையில் வானவில் நிறத்திலான பல வண்ணக் கொடிகளை ஏந்திச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

கியஃப் நகரின் மத்தியில் நடைபெறும் முதல் ஒரு பாலுறவுக்காரர்கள் பேரணி என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலவரத்தடுப்பு காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்குமுன், யுக்ரைனில் நடைபெற்ற ஒரு பாலுறவுக்காரர்கள் பேரணியின் போது தீவிர வலதுசாரி தேசியவாத குழுக்களால் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யுக்ரைனின் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளின் அழுத்தம் காரணமாக, இந்த ஆண்டு பேரணியை சுமூகமாக நடத்த வேண்டும் என்று யுக்ரைனிய அதிகாரிகள் கவனம் செலுத்தி இருப்பதை பேரணிக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காட்டுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.