குவாட்டமாலாவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது

  • 12 ஜூன் 2016

ஐநா ஆதரவு பெற்ற ஆணையத்தால் நடத்தப்படும் பெரிய புலனாய்வின் ஒரு பகுதியாக குவாட்டமாலாவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை JOHAN ORDONEZ AFP Getty Images
Image caption குவாட்டமாலாவின் முன்னாள் அதிபருக்கு பரிசாக ஹெலிகாப்டர் வாங்க பொது நிதியை பயன்படுத்தியதாக இரு முன்னாள் அமைச்சர்கள் மேல் குற்றச்சாட்டு

பெயர் களங்கப்பட்ட முன்னாள் அதிபர் ஒட்டோ பெரிஸ் மோலினாவுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஹெலிகாப்டரை வாங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சர் மனுவெல் லோபஸ் அம்புரோசியோவும், உள்துறை அமைச்சர் மௌரிசியோ லோபஸ் போனிலாவும் பொது நிதியை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை JOHAN ORDONEZ AFP Getty Images
Image caption போராட்டங்களின் நடுவில் பதவி இறங்கிய பெரிஸ் மோலினா குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்

வறிய மத்திய அமெரிக்க நாட்டில் பரவிய ஊழலுக்கு எதிரான போராட்டங்களின் நடுவில் பதவியிலிருந்து இறங்கிய பெரிஸ் மோலினா செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.