இந்திய குடியரசு தலைவர் ஆறு நாள் ஆப்ரிக்க பயணம்

இந்திய குடியரசு தலைவர் பிரானாப் முகர்ஜி, ஆப்ரிக்காவுடனான வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கிலான ஆறு நாள் பயணத்தை தொடங்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA

கானா, ஐவரி கோஸ்ட் மற்றும் நமிபியா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளார்.

இந்தியாவின் வளர்ந்து வரும் தொழிற்துறைக்கு தேவையான எண்ணெய் மற்றும் கனிமங்களுக்கு முக்கிய ஆதாரமாக ஆப்ரிக்கா பார்க்கப்படுகிறது.

சீனா முக்கிய முதலீட்டாளராக இருக்கும் ஆப்ரிக்க கண்டத்துடனான தொடர்புகளை வலுப்படுத்துவதில் இந்தியாவும் முனைப்புடன் உள்ளது.

குடியரசுத் தலைவரின் பயணத்திட்டத்தில் உள்ள மூன்று நாடுகளும் ஒரு திடமான அரசியல் அமைப்பை கொண்டு மற்றும், ஜனநாயகம் வேர் ஊன்றியுள்ள நாடுகள் என்று இந்திய அதிகாரி ஒருவர் விவரித்துள்ளார்.