இராக்: மோசூலில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்

  • 12 ஜூன் 2016

இராக்கின் தென் பகுதி நகரான மோசூலில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் ஒன்றை அரசப்படை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தலைமையிலான படைகளின் விமானத் தாக்குதல் ஆதரவோடு இராக் அரசப்படைகள், டாங்கிகள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்களுடன் முன்னேறி வருவதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் வடபகுதியில், மோசூலில் இருந்து ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய வலுவிடமான இரண்டு கிராமங்களை இலக்காக வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக தோன்றுகிறது.