அமெரிக்கா: ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு

இரவு கேளிக்கையகம் ஒன்றில் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஓர்லாண்டோ நகரிலுள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஒரு பாலுறவுகாரர்கள் கேளிக்கையகத்தில் பலர் சுட்டப்பட்டுள்ளனர்.

குறைந்தது இருபது பேர் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கிதாரி பணய கைதிகளை வைத்திருப்பதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption குறைந்தது 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், பணய கைதிகள் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது

ஓர்லாண்டோ பிரிமியர் ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்று விளம்பரப்படுத்தி கொள்ளும் கேளிக்கையகத்திற்கு வெளியே காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை டிவிட்டரில் பதிவேற்றப்பட்ட காணொளி பதிவுகள் காட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை EPA
Image caption டஜன்கணக்கான அவசர ஊர்திகள் சிகிச்சை அளித்து வருகின்றன.

இந்த சம்பவம் அதிகாலையில் நடைபெற்றுள்ளது. டஜன்கணக்கான அவசர சிகிச்சை வாகனங்கள் சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டுள்ளன. இன்னும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.