சுதந்திரத்தை தற்காத்து கொள்வது அவசியம் - பிலிப்பைன்ஸ் அதிபர்
பெரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரத்தை குடிமக்கள் தற்காத்து கொள்ள வேண்டியது அவசியமாகும் என்று பதவி காலம் நிறைவடைந்து செல்லவிருக்கும் பிலிப்பைன்ஸ் அதிபர் பினிக்னோ அக்வினோ தெரிவித்திருக்கிறார்.
ஒரு தலைமுறை காலத்திற்கு முன்னால் அரசு மக்களின் உரிமைகளை அடக்கி ஒடுக்கியது. அந்நிலை மீண்டும் நிகழலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த மாதத்தின் கடைசியில் சர்ச்சைக்குரிய புதிய அதிபர் ரோட்ரிகோ டியூடெர்டோ பதவியேற்க இருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு இராஜாங்க அதிகாரிகளுக்கு இடையே அவர் வலுவான சொற்களிலான இந்த உரையை நிகழ்த்தியுள்ளார்.
சமரசத்திற்கு இடமில்லாத மொழி மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகளுக்கு ஆதரவளிப்பது போல தோன்றுவது ஆகியவற்றால் டியூடெர்டோ விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.