அடுத்த ஆண்டு வரை கருத்தறியும் வாக்கெடுப்பு இல்லை - மதுரோ

குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு வரை தன்னுடைய தலைமை மீதான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெறாது என்று வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ அவருடைய எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption வான்கெடுப்பு நடத்த போதுமான நேரம் இல்லை - நிக்கோலாஸ் மதுரா

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சோசலிசக் கட்சியின் தலைவரான மதுரோ தான் காரணம் என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை பயன்படுத்தி அவரை பதவியிலிருந்து விரட்டிவிட முயற்சிக்கின்றன.

ஆனால், இந்த ஆண்டு கருத்தறியும் வாக்கெடுப்பில் அவர்கள் வெற்றிபெற்றால் புதிய தேர்தல் நடைபெற செய்யலாம்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வாக்கெடுப்பை தடுக்க தேர்தல் அதிகாரிகள் அதிபரோடு சோந்து கூட்டாக சதி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

வாக்கெடுப்பு நடத்த போதுமான நேரம் இல்லை என்பது அதிபரின் வாதமாக உள்ளது.

வாக்கெடுப்புக்கான வழிமுறையை தடுக்க அதிபர் மதுரோவோடு கூட்டாக சதி செய்வதாக தேர்தல் அதிகாரிகளை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

பெரிய அளவில் எண்ணெய் கையிருப்பை பெற்றிருந்தாலும், நாட்டில் பரவியிருக்கும் உணவு பற்றாக்குறை மற்றும் அடிக்கடி நடக்கும் கொள்ளை சம்பவங்களால் வெனிசுவேலா பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது.