கலிபோர்னியாவில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கன ரக ஆயுதங்களுடன் கைது

  • 13 ஜூன் 2016

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒரு பாலுறவுக்காரர்களின் பேரணியில் பங்கு கொள்ள திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்த, கன ரக ஆயுதங்களை வைத்திருந்த நபரை கலிபோர்னியப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த பேரணியில் தீங்கு விளைவிக்கப்போகும் தனது நோக்கை அந்நபர் வெளிப்படுத்தியதாக முன்னதாக வெளிவந்த கருத்துக்களை போலிஸார் உறுதிப்படுத்தவில்லை.

ஆனால் இந்தியானாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹொவெல் என்னும் அந்நபர் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவனிடம் மூன்று தாக்குதல் துப்பாக்கிகள், ரசாயனங்கள் மற்றும் நச்சுப்புகை முகமூடிகள் காணப்பட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாண்டா மோனிக்கா கடற்கரை அருகில் கைது செய்யப்பட்ட அந்நபர், சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடியதாக உள்ளூர் வாசிகளால் அடையாளம் காணப்பட்டார்

இந்நிகழ்வுக்கும் ஒர்லாண்டோ துப்பாக்கிச் சூட்டிற்கு எந்த தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.