பாலியல் வல்லுறவு வழக்கில் டச்சு பெண்ணுக்கு தண்டனை

  • 13 ஜூன் 2016

கத்தாரில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகக் கூறிய டச்சு பெண்ணொருவருக்கு ஓராண்டு இடை நிறுத்தப்பட்ட சிறை தண்டனையை கத்தார் நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

விடுமுறைக்கு கத்தார் வந்திருந்தபோது தான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் அளித்த அவர், திருமண பந்தத்திற்கு புறம்பாக உறவு கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இந்த தீர்ப்பை பெற்றுள்ளார்.

அதற்காவே தண்டனை பெற்றுள்ள அவர் நாடு கடத்தப்படவுள்ளார்.

இதே குற்றம் சுமத்தப்பட்ட ஆண் பிரதிவாதி ஒருவருக்கு 100 சாட்டையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த டச்சு பெண் ஒரு நாள் இரவுநேரத்தில் சென்ற ஹோட்டலில் அருந்திய மதுவில் போதை மருந்து கலக்கப்பட்டிருந்ததாக நம்புவதாகவும், பழக்கமில்லாத குடியிருப்பு ஒன்றில் கண் விழித்தபோது, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருந்ததை உணர்ந்ததாகவும் அந்த டச்சு பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.