பஹ்ரைனில் முன்னணி மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கைது

  • 13 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Getty

வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் முன்னணி மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபீல் ரஜாப் வீட்டில் அதிகாலை நடந்த சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக ரஜாப் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பஹ்ரைன் மனித உரிமைகள் மையம் என்ற மையத்தை நபீல் தொடங்கியதிலிருந்தே பல சிறைத் தண்டனைகளை அனுபவித்துள்ளார்.

அரபு வசந்தகால புரட்சியின் போது, ஜனநாயக சார்பு போராட்டங்களில் நபீல் ரஜாப் முன்னிலை வகித்தார். ஆனால், அப்போதைய காலகட்டத்தில் அந்த போராட்டங்கள் அடக்கப்பட்டன.

பஹ்ரைனில் பெரும்பான்மை வகிக்கும் ஷியா முஸ்லீம் பிரிவை சேர்ந்த ரஜாப் கைது குறித்து அப்பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள், பஹ்ரைன் நாட்டின் அதிகார அமைப்புகள் தங்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

பஹ்ரைனின் ஆளும் நிறுவன அமைப்புகள் சுன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.