ஆஸ்கார் பிஸ்டோரியஸின் தண்டனை பற்றி விசாரணை

  • 13 ஜூன் 2016

காதலி ரீவா ஸ்டீன்காம்பை கொலை செய்த தென்னாப்பிரிக்க தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸின் தண்டனை தொடர்பான விசாரணை பிரிட்டோரியாவில் நடைபெற்றுவருகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

குறைந்தது 15 ஆண்டு சிறை தண்டனையை பிஸ்டோரியஸ் எதிர்நோக்குகிறார். இந்த விசாரணையில் பிஸ்டோரியஸ் சாட்சியமளிக்கலாம் என தெரிவிகிறது.

தொடக்க விசாரணையின்போது உடல்நலம் குன்றியிருந்த ரீவா ஸ்டீன்காம்புவின் தந்தை பேரி, இந்த விசாரணையில் ஏதாவது நிலைப்பாடு எடுக்கலாம்.

இந்த வாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

முதலில் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் நோக்கமின்றி கொலைசெய்துவிட்டதாக குற்றம் காணப்பட்டார். ஆனால், மேல்முறையீட்டில் கொலை குற்றவாளி என தீர்ப்பு பெற்றார்.

2013 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட அவரது காதலியை திட்டமிட்டு கொலை செய்ததாக கூறுவதை பிஸ்டோரியஸ் மறுக்கிறார். ஏதோ திருடன் என்று எண்ணி தவறுதலாக இச்சம்பவம் நிகழ்ந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.