மூழ்கிய பயணியர் கப்பலை இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீட்க முயற்சி

தென் கொரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய சிவொல் என்ற பயணியர் கப்பலை மீட்டு கரைக்கு கொண்டுவரும் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

படத்தின் காப்புரிமை EPA

இந்த விபத்தில் 300-க்கு மேலானோர் இறந்தனர். அதில் பெரும்பாலோர் பள்ளிக் குழந்தைகள்.

தென்கொரியாவின் தென் மேற்கு கடற்கரையில் சுமார் நாற்பது மீட்டர் தொலைவில் கடல் படுகையில் இந்த பயணியர் கப்பல் மூழ்கி கிடக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

இறந்தவர்கள் சிலரின் குடும்பத்தினர் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதைப் பார்க்க பனி மூட்டத்தில் நின்றிருந்தனர்.

அந்த பயணியர் கப்பலின் அடியில் நீள உத்திரங்களை போட்டு உடைந்து விடாமல் மேல்மட்டத்திற்கு தூக்கி எடுக்க சீன நிறுவனம் ஒன்று முயற்சிக்கிறது.

படத்தின் காப்புரிமை AP

இதனை மீட்டெடுத்து ஏதாவது சிதிலங்களை மீட்க அனுமதிப்பதற்கு பலியானோரின் உறவினர்கள்தான் தென் கொரிய அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.