தாக்குதல் குழுவுக்கு பதிலடி கொடுத்த உகாண்டா ராணுவம்

  • 14 ஜூன் 2016

நாட்டின் வட பகுதியில் உள்ள குலுவில் மத்திய காவல் நிலையத்தை தாக்க வந்த துப்பாக்கி ஏந்திய குழுவுக்கு தாக்குதலை முறியடித்ததாக உகாண்டாவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty

இந்த தாக்குதல், கைது செய்யப்பட்ட டான் உலா ஒடிய என்ற எதிர்கட்சி அரசியல்வாதி ஒருவரை காப்பாற்றும் முயற்சி என போலிஸாரால் நம்பப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு 30 நிமிடங்களுக்கு நடைபெற்றது பிறகு தாக்குதலில் ஈடுபட்டவர்கள், ஆறு ஆயுதங்களை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர் எனத் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் நடந்த சர்ச்சைகுரிய தேர்தலுக்கு பிறகு உகாண்டாவில் அரசியல் பதற்றங்கள் அதிக அளவில் உள்ளது.

கடந்த வாரம் உகாண்டா ராணுவம் கிளர்ச்சியாளர்களின் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று சந்தேகித்து, குறைந்தபட்சமாக முப்பது சிப்பாய்கள் மற்றும் பொதுமக்களை கைது செய்துள்ளனர்.