மகளை கொன்றதற்கு பிஸ்டோரியஸ் தண்டனை பெற வேண்டும் - ஸ்டீன்காம்ப்

நீதிமன்றத்தில் முதல்முறையாக தோன்றியுள்ள, கொலை செய்யப்பட்ட தென்னாப்பிரிக்க மாடல் அழகி ரீவா ஸ்டீன்காம்பின் தந்தை, மகளை கொன்ற குற்றத்திற்காக ஆஸ்கார் பிஸ்டோரியஸ் தண்டனை பெற வேண்டும் என்று பேசியுள்ளார்.

உடல்நலம் குன்றியிருந்ததால் முதல் விசாரணைக்கு வர இயலாமல் இருந்த ஸ்டீன்காம்ப் அதிக உணர்ச்சிபெருக்கோடு வழங்கிய சாட்சியத்தில், மகளின் கொலையால் அவருடைய குடும்பம் பாழாகியுள்ளதாக கூறினார்.

செவிலியர் ஒருவரின் சாட்சியத்தையும் நீதிமன்றம் கேட்டது. சிறையில் இருந்தபோது பிஸ்டோரியஸ் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP

முதலில் பெற்ற தீர்ப்பு பின்னர் மேல்முறையீட்டில் கொலை குற்றமாகிய பிறகு தடகளவீரரான பிஸ்டோரியஸூக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று பிரிட்டோரியாவில் நடைபெறும் இந்த விசாரணையில் முடிவு செய்யப்படும்