நியூசிலாந்தில் அதிகரித்துள்ள வெண்ணெய் பழ திருட்டு

  • 15 ஜூன் 2016

மோசமான பயிர் சாகுபடியை தொடர்ந்து ஏற்பட்ட வெண்ணெய் பழ (அவகெடோ) பற்றாக்குறை, நியூசிலாந்தில் அசாதாரண குற்ற அலையொன்றை தூண்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption வெண்ணெய் பழம்

விரைவாக பணம் ஈட்டும் எண்ணத்தில், சில சந்தர்ப்பவாத திருடர்கள் வெண்ணெய் பழத்தோட்டங்களை அதிகளவில் வேட்டையாடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தின் வடக்கு தீவினில் பல மடங்கு வெண்ணெய் பழங்கள் காணாமல் போவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில், இது வரை 40 வெண்ணெய் பழ திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகப்படியான சர்வதேச தேவை மற்றும் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் சில பல்பொருள் அங்காடிகளில் வெண்ணெய் பழத்தின் விலை 4 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.