பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் - ரோல்ஸ் ராய்ஸ் விருப்பம்

  • 15 ஜூன் 2016

பிரிட்டனின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என தான் விரும்புவதாக தனது ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக முடிவு செய்தால், நாற்பத்தைந்து மில்லியன் டாலர் எஞ்சின் சோதனை தொழிற்சாலைக்கான தனது திட்டமிட்ட முதலீடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என எச்சரித்துள்ளது.

சிவில் விமான எஞ்சின் தயாரிப்பில் நிபுணத்துவம் வாய்ந்த இந்த நிறுவனம், பிரிட்டனின் ஏற்றுமதி மதிப்பில் இரண்டு சதவீதத்தை தனதாக கொண்டுள்ளது.