மாவோவின் மண்ணில் மிக்கி மவுஸ்

  • 16 ஜூன் 2016

சீனப் பெருநிலப்பரப்பில் முதல் டிஸ்னிலேண்ட் பொழுது போக்கு பூங்கா ஷாங்காய் நகரில் பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஷாங்காய் நகரில் டிஸ்னிலேண்ட் பொழுது போக்கு பூங்கா

இதன் மூலம் மாவோவின் மண்ணில் மிக்கி மவுஸ் நுழைய உள்ளது.

வளர்ந்து வரும் சீனாவின் நடுத்தரவர்க்க மக்களை குறிவைத்துள்ள அமெரிக்காவின் மாபெரும் பொழுதுபோக்கு ஜாம்பவானான டிஸ்னி , சீனாவில் பொழுது போக்கு பூங்கா துவங்கும் முயற்சியினை , தான் துவங்கியதிலேயே ஒரு மிகப்பெரிய படி என்று வர்ணித்துள்ளது.

நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 5.5 பில்லியன் டாலர் செலவிலான இந்த பூங்கா, சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில், தனது முதல் பொழுது போக்கு பூங்காவை டிஸ்னி துவங்கவுள்ள சூழலில், இது தொடர்பான கொண்டாட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.