ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்: கருமுட்டைகளை உறைய வைக்க நிதியுதவி

ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை சரி செய்யும் முயற்சியில், ஜப்பான் நகரம் ஒன்று, பெண்கள் அவர்களின் கருமுட்டைகளை உறைய வைப்பதற்கான செலவில் உதவி அளிக்க உள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

டோக்கியோவின் புறநகர் பகுதியான உரயஸு, 850,000 டாலர்களை இதற்கான மூன்றாண்டு முன்னோடி திட்டத்தில் ஒதுக்கியுள்ளது. இது போன்ற ஒரு திட்டம் உலகிலேயே முதல் முறையானது என நம்பப்படுகிறது.

இத்திட்டத்தின் பொறுப்பில் உள்ள மருத்துவர்கள், இம்மாதிரியாக கருமுட்டைகளை பாதுகாப்பது பெண்கள், குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடிய காலத்தை நீட்டிப்பதால், அவர்கள் விரும்பும் நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்து வருடங்களில் மக்கள் தொகை ஒரு மில்லியன் அளவிற்கு குறைந்துள்ளது என்று புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வெளிப்படுத்திய பிறகு ஜப்பான் அரசு மக்கள் தொகையை அதிகரிக்க பல வழிகளை ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.