ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை வருமா? தடுக்கும் முயற்சியில் ரஷ்யா

படத்தின் காப்புரிமை

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில், ரஷ்யா கலந்து கொள்ள அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க ஒரு நாள் உள்ள நிலையில், உலக ஊக்க மருந்து தடை அமைப்புடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டில் ரஷிய அரசாங்கம் சில சமரச கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஊக்க மருந்து சோதனை முயற்சிகளை தொடர்ந்து தடுத்த வண்ணம் இருந்ததாக ரஷியா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP

ஆனால், ரஷியாவின் விளையாட்டுத் துறை அமைச்சர் விட்டலி முட்கோ, ரஷிய வீரர்களிடம் ஊக்க மருந்துக்கு எதிரான அமைப்பு எந்த இடத்திலும் சோதனைகளை மேற்கொள்ள தான் உதவத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், உலக தடகள அமைப்பின் நிர்வாக குழு நிர்ணயித்திருக்கும் விதிமுறைகளை அனைத்து நிலைகளிலும் ரஷியா பூர்த்தி செய்திருப்பதாக முட்கோ வலியுறுத்தி உள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது, சூச்சி பகுதியிலிருந்த ஆய்வகத்தில் நிறைய பிரச்சினைகள் இருந்ததாக பிபிசி செய்தியாளரிடம் உலக ஊக்க மருந்துக்கு எதிரான அமைப்பின் தலைவர் சர் கிரெய்க் ரீடி தெரிவித்துள்ளார்.