பாலியல் மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டார் பிரிட்டன் கலைஞர்

படத்தின் காப்புரிமை Getty

நீண்ட காலமாக பாலியல் மோசடி குற்றஞ்சாட்டுக்களுக்குள்ளான பிரிட்டனின் பிரபல கலைஞர்களில் ஒருவரான சர் கிளிஃப் ரிச்சர்ட், இறுதியாக அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டுள்ளார்.

75 வயதான பாடகர் சர் ரிச்சர்ட் கிளிஃப்பை தண்டிக்க போதுமான ஆதாரம் எதுவுமில்லை என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

1950களில் இருந்து 1980 வரை இடைப்பட்ட காலத்தில் சர் கிளிஃப் ரிச்சர்ட் மீது புகார் கூறிய நான்கு பேரின் ஆதாரங்களையும் இந்த அமைப்பு ஆராய்ந்து வந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் சர் கிளிஃப் ரிச்சர்ட் மறுத்து வருகிறார்.