தென்னாப்ரிக்காவின் திருப்புமுனையான சொவேட்டோ எழுச்சியின் 40-ஆண்டு நிறைவு

சொவேட்டோ எழுச்சி துவக்கத்தின் நாற்பதாம் ஆண்டு நிறைவு நாள் இன்று தென்னாப்ரிக்காவில் கடைப்பிடிக்கப்டுகிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்பு படம்

சொவேட்டோ எழுச்சியின் போது, தங்களை ஆஃப்ரிகான்ஸ் மொழியில் கல்வி கற்க வற்புறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான கருப்பு இன மாணவர்கள் அணிவகுத்து பேரணியாக சென்றனர்.

சிறுபான்மை வெள்ளை இன ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில், இது ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்பட்டது.

இதனை தொடர்ந்து நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். பரவலான சர்வதேச கண்டனங்கள் இருந்த போதிலும், தென்னாப்ரிக்காவின் நிறவெறி அரசு ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கியது.

மாணவர்களின் போராட்டம் தற்போதைய காலகட்டத்திலும் நடக்கிறது. நாட்டின் சீர்திருத்த வேகத்தில் விரக்தி கொண்டவர்களால், சில சமயம் பள்ளிக்கூடங்கள் தீக்கரையாக்கப்படுவதுண்டு.

உள்நாட்டு தேர்தலுக்கு தென்னாப்பிரிக்கா தயராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்த கால உத்திகளை நிராகரிக்க நாட்டின் இளைஞர்களுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.