யாஸிடி சமூகத்தினரை ஐ.எஸ் இனப்படுகொலை செய்ததாக முதன் முறையாக ஐ.நா குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை AP

இராக் மற்றும் சிரியாவில், யாஸிடி சமூகத்தினர் மீது இனப்படுகொலையை நிகழ்த்தியதாக முதன் முறையாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ஐ.நாவின் மனித உரிமைகள் விசாரணை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அந்த சமூகத்தை சேர்ந்த ஆண்களை படுகொலை செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைப்படுத்தி, அவர்களின் பாரம்பரிய நம்பிக்கைகளைத் தடை செய்து ஒட்டுமொத்த யாஸிடி சமூகத்தினை அழித்தொழிக்க ஐ.எஸ் அமைப்பு முயற்சித்து வருவதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

3,000க்கும் அதிகமான யாஸிடி பெண்கள் மற்றும் குழந்தைகள், இன்னும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், பாலியல் அடிமைகளாக விற்கப்படுவதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

இந்த வழக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு இந்த வல்லுநர் குழு வாதிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

மேலும், இந்த சம்பவம் நடைபெற்ற இடங்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் இதனை செய்தவர்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் தங்களிடம் உள்ளதாக இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

உலகின் வல்லரசு நாடுகள் யாஸிடி சமூகத்தினருக்கு நிறைய உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

2014 ஆம் ஆண்டில் வட இராக்கில் உள்ள யாசிடி மக்கள் வாழும் பகுதிகளை ஐ.எஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.