இருபது ஆண்டுகளாக காணாமல் போன ஜப்பானியர் அங்கேயே கண்டுபிடிப்பு

20 ஆண்டுகளுக்கு முன்னால் வட கொரியாவால் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட ஜப்பானியர் ஒருவர், இப்போது ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ளார்.

காஸூயா மியாவ்ச்சி 1997 ஆம் ஆண்டு காணமல் போனது வட கொரியாவோடு தொடர்புடைய சம்பவம் அல்ல என்று ஃபுகுய் மாகாணத்தின் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

ஆனால், காணாமல் போயிருந்த இந்த ஆண்டுகளில் அந்த நபர் எங்கிருந்தார் என்பதைக் கூற காவல்துறை மறுத்துவிட்டது.

1970-களில் 13 ஜப்பானிய குடிமக்களை கடத்தியதை வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளது.

வட கொரியாவால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 800 பேருக்கு மேலானோரில் ஒருவராக மியாவ்ச்சியும் இருந்தார்.