''ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் நிதி எங்களுக்கு வேண்டாம்'': எம்.எஸ்.எஃப் அறிவிப்பு

  • 17 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Getty

ஐரோப்பிய யூனியன் மற்றும் அதன் உறுப்பு நாடுகளிடம் இனி எவ்விதமான நிதியுதவிகளையும் பெற மாட்டோம் என்று சர்வதே உதவி நிறுவனமான எம்.எஸ்.எஃப் என்றழைக்கப்படும் மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியரஸ் அறிவித்துள்ளது.

ஐரோப்பாவுக்கு வரும் பல்வேறு நாடுகளின் அகதிகளைத் தடுக்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றும் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை எம்.எஸ்.எஃப் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தொண்டு நிறுவனத்தின் பொது செயலாளர் ஜெரூம் ஓபெர்ரைட், அகதி என்றால் யார் என்ற கருத்தை ஆபத்துக்குள்ளாக்கும் ஐரோப்பாவின் கொள்கைகள் குறித்து தனது கண்டனங்களை தெரிவித்தார்.

அந்த தொண்டு நிறுவனத்துக்கு 90 சதவீத நிதியுதவி தனியாரிடமிருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.