சடசடவென சரியும் துருக்கிய சுற்றுலாத்துறை; பல பில்லியன் இழப்பு

சடசடவென சரியும் துருக்கிய சுற்றுலாத்துறை; பல பில்லியன் இழப்பு

உலக அளவில் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஆறாவது நாடு துருக்கி.

ஆனால் அங்கே செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் நாற்பது சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதனால் பொருளாதார ரீதியில் பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதும், வேறுபல பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

துருக்கிய சுற்றுலாத்துறையின் சரிவு ஏற்படுத்தியிருக்கும் பன்முக பாதிப்புகள் குறித்து பிபிசி செய்தியாளர் துருக்கியில் இருந்து வழங்கும் செய்தித் தொகுப்பு.