ஒபாமா நிர்வாகத்தின் சிரியா கொள்கை மீது அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் கடுமையான விமர்சனம்

ஐம்பதற்கும் மேற்பட்ட அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் ஒபாமா நிர்வாகத்தில் சிரியா குறித்த கொள்கையை கடுமையாக விமர்சித்து குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP

நியூ யார்க் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைகளால் பார்க்கப்பட்ட-அந்த ஆவணத்தில், அமெரிக்கா, சிரியாவில் தொடரும் போர் நிறுத்த மீறலை நிறுத்த, சிரியாவின் அதிபர் ஆசாத்தை எதிர்த்து ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

சிரியாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படுவதற்கான தார்மீக நியாயங்கள் கேள்விக்கப்பாற்பட்டது என்று அவர்கள் வாதாடுகின்றனர்.

அமெரிக்க வெளியுறவு துறை இந்த ஆவணம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. (ராஜ்ய அதிகாரிகள் தங்களுக்கான கருத்து வேறுபாடுகளை துறை ரீதியாக வெளிப்படுத்தும் ஊடகத்தில் அது பிரசுரிக்கப் பட்டுள்ளது என்று கூறப்படுகிறது)