சிரியா விவகாரத்தில் ரஷியா வாஷிங்டனுக்கு எச்சரிக்கை

சிரியா அரசின் படைப்பிரிவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த பிராந்தியமே பெருங்குழப்பத்தில் மூழ்கும் என்று ரஷியா வாஷிங்டனை எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

முன்னதாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறிவரும் சிரியா அதிபர் அசாத்தின் அரசப் படைகளை இலக்காக கொண்டு இராணுவத் தாக்குதல் நடத்த ஒபாமா அரசை வலியுறுத்துகின்ற குறிப்பை 50 அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு வழங்கியிருந்தனர்.

இது பற்றி கிரம்ளின் பேச்சாளர் டிமிட்ரிறி பிஸ்கோவ் கருத்து தெரிவித்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆட்சியை நீக்கிவிடுதல் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு உதவாது என்று பிஸ்கோவ் கூறியுள்ளார்.