சிரியா அரசு தொடர்பான அமெரிக்க நிலைக்கு புதின் ஆதரவு

  • 17 ஜூன் 2016

சிரியா எதிர்கட்சிகளின் ஒரு பகுதியினர் தற்போதைய அரசில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் முன்மொழிவுகளை ஆதரிப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

அரசியல் சீர்திருத்த வழிமுறைகளுக்கு அவசியம் இருப்பதை சிரியா அதிபர் அசாத் ஏற்றுக் கொண்டிருப்பதை புதின் வலியுறுத்தியுள்ளார்.

அசாத் தன்னுடைய நாட்டின் எல்லையில் கட்டுப்பாட்டை பேணுவதை விட முக்கியமானது, ஆட்சியாளர்களிடம் மக்கள் வைத்திருக்க வேண்டிய ஒட்டுமொத்த நம்பிக்கை மீட்டெடுப்பதுதான் என்று புதின் கூறியுள்ளார்.

முன்னதாக, சிரியா அரசின் படைப்பிரிவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த பிராந்தியமே பெருங்குழப்பத்தில் மூழ்கும் என்று அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.