பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தடுப்பு சோதனைகள் - அமைதி கோருகிறார் பிரதமர்

  • 18 ஜூன் 2016

பிரஸ்ஸல்ஸ் நகரில் பல இடங்களிலும் பிற இடங்களிலும், நேற்றிரவு பாதுகாப்புப் படைகள் நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு சோதனைகளுக்குப் பின்னர், பெல்ஜியப் பிரதமர் , சார்ல்ஸ் மிஷெல்,அமைதியைக் கோரியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

ஒரு தாக்குதலை நடத்த ஆயத்தம் செய்துகொண்டிருந்ததான சந்தேகத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் நடந்து வரும் யூரோ-2016 போட்டிகளில் பெல்ஜியம் விளையாடும் போட்டிகள் திரையிடப்பட்டுவரும் , பிரஸ்ஸல்ஸில் உள்ள கால்பந்து ரசிகர்கள் பகுதி தாக்குதலுக்கான இலக்காக இருந்திருக்கலாம் என்று பெல்ஜிய ஊடகங்கள் கூறின.

பெல்ஜியம் இன்று அயர்லாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

ஆயுதங்களோ அல்லது வெடிபொருட்களோ கண்டுபிடிக்கப்படவில்லை.

அச்சுறுத்தல் அளவு, இரண்டாவது மிகப்பெரிய அளவான, மூன்று என்ற மட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters

சிரியாவிலிருந்து பல ஐ.எஸ் தீவிரவாதிகள் ஐரோப்பாவுக்கு புறப்பட்டி வந்திரிப்பதாகக் கடந்த வாரம் பெல்ஜியப் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலும், நகரின் ரெயில் நிலையங்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 32 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.