பெல்ஜியத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 12 பேர் கைது

  • 18 ஜூன் 2016

தீவிரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் 12 பேரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பெல்ஜியம் போலீஸ்

நேற்றிரவில் மட்டும் பிரஸ்ஸல்ஸின் முக்கிய இடங்கள் உள்பட பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினார்கள். 40 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அந்த சோதனை நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிக் நாடு என்ற ஆயுதக்குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர், சிரியாவில் இருந்து புறப்பட்டு ஐரோப்பா நோக்கி வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு எச்சரிக்கை வந்திருப்பதாக கடந்த வாரம் பெல்ஜியம் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலும் மெட்ரோ ரயிலிலும் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.