சிக்காகோ: தான் சுடப்பட்டதை முகநூலில ஒளிப்பதிவு செய்தவர்

முகநூலில் தன்னுடைய காணொளியை நேரலையாக ஒளிபரப்பி கொண்டிருந்த ஒருவர் தற்செயலாக தான் சுடப்பட்டதையும் பதிவுச் செய்துள்ளாக அமெரிக்காவின் சிக்காகோ நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆன்றனியோ பெர்கின்ஸ் என்ற அந்த நபர் புதன்கிழமை நேரலையாக தன்னுடைய ஒளிப்பதிவை பதிவேற்றி கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுடுகின்ற சத்தம் வெளியே கேட்க தொலைபேசி உடனே கீழே விழுந்துள்ளது. அதன்பிறகு, கூக்குரலும், உதவிக்கு அழைப்பதும் மட்டுமே கேட்க முடிந்த்து.

இந்த ஒளிப்பதிவில் துப்பாக்கியால் சுட்டவர் பதிவாகவில்லை.

இந்த காணொளி, தங்கள் நிறுவனத்தின் கோட்பாட்டை மீறவில்லை என தெரிவித்திருக்கும் முகநூல், அதனுடைய வரைகலை உள்ளடக்கம் பற்றிய எச்சரிக்கையோடு அது இணையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.