'ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால்,பிரிட்டனின் முக்கியத்துவம் குறையும்'

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது ஐரோப்பிய எல்லைகளில் இருக்கும் ஒரு வர்த்தக நிலையமாக அதனைக் குறைத்துவிடும் என்று பிரெஞ்சு பொருளாதார அமைச்சர் இம்மானுவேல் மாக்ரோன் எச்சரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை

குயர்ன்சி தீவை போல உலக அரங்கில் பிரிட்டன் சிறியதொரு நாடாக மாறிவிடும் என்று 'லெ மொந்த்' செய்தித்தாளிடம் மாக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

நார்வே அல்லது சுவிட்சர்லாந்து போன்ற பிற உறுப்பினர் அல்லாத நாடுகளைப் போல ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு திட்டத்திற்கு பிரிட்டன் பங்களிப்பதாக இருந்தால் ஐரோப்பாவின் தனிச் சந்தையை அணுக முடியும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகினால், 'உள்ளே இணைந்திருங்கள் அல்லது வெளியே இருங்கள்" என்ற நிபந்தனையில் ஐரோப்பிய கவுன்சில் கெடு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்திருக்கிறார்.