நேட்டோ ரஷியாவோடு முறுகல் நிலை வேண்டாம் - பிராங்-வால்டர்

ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் பிராங்க்-வால்டர் ஸ்டெயின்மேயர், சண்டைக்கிழுக்கும் பேச்சுக்கள் மற்றும் சவடால் பேச்சுக்கள் மூலம் நேட்டோ, ரஷியாவோடு முறுகல் நிலையை ஏற்படுத்துவதில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த மாதம் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ மேற்கொண்ட பரவலான படை நகர்வுகள் பிராந்தியப் பாதுகாப்பிற்கு எதிர்ப்பாகவே அமைந்தன என்று 'பில்ட் அம் சொன்டாக்' என்ற செய்தித்தாளில் வெளியாகவுள்ள கருத்துக்களில் கூறியிருக்கிறார்.

இராணுவ நடவடிக்கைகளை எடுப்பது போன்ற சமிக்ஞைகளும், முன்னமே தடுக்கும் நடவடிக்கைகளும், ரஷியாவோடு அதிக பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புகளால் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக அடுத்த மாதம் வார்சாவில் நடைபெற இருக்கும் நேட்டோ உச்சி மாநாட்டின் பின்னணியில் இது முக்கியம் என்று அவர் கூறியிருக்கிறார்.