உலக நாடுகளுக்கு ஐ.நாவின் பொது செயலாளர் பான் கீ மூன் முக்கிய கோரிக்கை

  • 18 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை

குடியேறிகள் நெருக்கடியை சமாளிக்க கிரீஸுக்கு உதவுமாறு சர்வதேச சமூகங்களிடம் உதவி கோரியுள்ளார் ஐ.நாவின் பொது செயலாளர் பான் கீ மூன்.

படத்தின் காப்புரிமை AP

கிரீஸின் இரக்க குணம் பற்றி ஏதென்ஸில் புகழ்ந்து பேசிய பான் கீ மூன், ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளும், உலகில் உள்ள நாடுகளும் இந்த சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

வட ஐரோப்பாவிற்கு செல்லும் பால்கன் பாதை மூடப்பட்டதில் இருந்து சுமார் 50 ஆயிரம் குடியேறிகள் தவித்து வரும் கிரீஸின் லெஸ்போஸ் தீவுக்கு பான் கீ மூன் செல்லவுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் டிஸிபிராஸ்

கிரீஸ் கடற்கரைகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர் காக்கும் மிதவை உடுப்புகளிலிருந்து ஒரு மிதவை உடுப்பை கிரேக்கப் பிரதமர் அலெக்ஸிஸ் சிப்பிராஸ் , பான் கீ மூனிடம் வழங்கியுள்ளார்.