ஃபலூஜாவை தொடர்ந்து மொசூல் நகரை கைப்பற்ற இராக் ராணுவம் தீவிரம்

  • 18 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Reuters

மொசூல் நகரில் தெற்கு பகுதியை நோக்கி தங்கள் படைகள் முன்னேறி வருவதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது, ஐ.எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் மொசூல் நகரம் உள்ளது.

மொசூல் நகரத்திலிருந்து 70 கி.மீ தொலைவில், டைகரஸ் ஆற்றின் மீது அமைந்துள்ள அல் கயாரா என்ற நகரத்தை இராக் ராணுவத்தினர் இலக்காக வைத்துள்ளனர்.

அங்கு அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விமான தளம் அதற்கு காரணம்.

சுமார் ஒரு மாத கால சண்டைக்குபின், பாக்தாத்தின் வடமேற்கில் உள்ள ஃபலூஜா நகரை மீட்டுவிட்டதாக இராக் ராணுவம் அறிவித்துள்ள நிலையில், மொசூல் நகரத்தில் இராக் ராணுவம் மேற்கொள்ள உள்ள தாக்குதல் குறித்து அறிவித்துள்ளது.

ஆனால், ஃபலூஜா நகரின் கால் வாசி பகுதி இன்னும் இராக் ராணுவத்தின் பிடியில் இல்லை என போலிசார் குறிப்பிட்டுள்ளனர்.