சோமாலியா: அப் ஷபாப் தீவிரவாதிகள் 43 பேருக்கு மரண தண்டனை

சோமாலியாவின் புண்ட்லாண்ட் அரை தன்னாட்சி பிராந்தியத்தின் நீதிமன்றம் ஒன்று அல் ஷபாப் இஸ்லாமியவாதத் தீவிரவாத குழுவை சேர்ந்த 43 பேருக்கு மரணதண்டனை விதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP

இந்த தண்டனைக்கு எதிராக அவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்.

அதே நேரத்தில் பிடிபட்ட அல் ஷபாப் படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சிறார் படையினருக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை என்று அரசு வழக்கறிஞர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மாறாக, அவர்கள் குழந்தைகள் சீர்திருத்தப் பள்ளிக்கு (புனர்வாழ்வு மையத்திற்கு) அனுப்பப்படுவர்.

கடந்த மார்ச் மாதம் அரசுக்கும் இந்த கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே நடைபெற்ற கடும் போரின்போது அல் ஷபாப் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.