ஜோ காக்ஸ் கொலை குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்

  • 18 ஜூன் 2016

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தாமஸ் மெயர் லண்டனிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

படத்தின் காப்புரிமை INDEPENDENT

53 வயதான அவரிடம் பெயர் கேட்கப்பட்டபோது, காட்டிக்கொடுப்பவர்களுக்கு மரணம், பிரிட்டனுக்கு சுதந்திரம் என்பது எனது பெயர் என்று தெரிவித்துள்ளார்.

கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தியதாகவும், துப்பாக்கி ஒன்றும், இன்னொரு தாக்குதல் கருவி வைத்திருந்ததாகவும் மெயர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

வியாழக்கிழமை தொகுதி மக்களிடம் உரையாற்றிவிட்டு, அரங்கத்திற்கு வெளியே வந்த ஜோ காக்ஸ் அம்மையார் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பரப்புரையை ஜோ காக்ஸ் அம்மையாரின் மரணம் இடைநிறுத்தியுள்ளது.