பத்திரமாக பூமிக்குத் திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்

  • 18 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Reuters
Image caption விண்வெளி வீரர்கள் டிம் பீக், யூரி மற்றும் டிம் கோப்ரா

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து மூன்று விண்வெளி வீரர்களை சுமந்த வந்த சோயூஸ் விண்கலம் பத்திரமாக கஜகஸ்தானில் தரையிறங்கியுள்ளது.

பிரிட்டனின் மேஜர் டிம் பீக், அமெரிக்காவின் டிம் கோப்ரா மற்றும் ரஷியாவின் யூரி மலென்செங்கோ ஆகியோர் விண்வெளியில் 186 நாட்களை கழித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை PA
Image caption விண்வெளி வீரர் டிம் பீக்

பூமியை சுற்றி வரும் ஆய்வகத்தில் பணிபுரியும் முதல் பிரிட்டீஷ் விண்வெளி வீரர் என்ற பெருமையை டிம் பீக் பெற்றுள்ளார்.

மேலும், கால் நூற்றாண்டுகளில் விண்வெளி பயணித்த முதல் நபர் என்ற பெருமையும் டிம் பீக் பெற்றுள்ளார்.

பூமியையும் தாண்டி செய்துள்ள தன்னிகரற்ற சேவையை பாராட்டி இந்த மாதம் எலிசபெத் ராணி டிம் பீக்கை கெளரவித்தார்.