வங்கதேச வலைபதிவர் கொலை வழக்கில் முக்கிய நபரை சுட்டுக் கொன்றுவிட்டதாக போலிஸ் தகவல்

படத்தின் காப்புரிமை bbc bangla
Image caption பிரபல மதச்சார்பற்ற வலை பதிவரான அவிஜித் ராய்

பிரபல மதச்சார்பற்ற வலை பதிவரான அவிஜித் ராய் 16 மாதங்களுக்குமுன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரை சுட்டு கொன்றுவிட்டதாக வங்கதேச போலிசார் கூறியுள்ளனர்.

சோதனை ஒன்றின் போது, இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர் மீது போலிசார் எதிர் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

அதில், ஒருவர் மீது குண்டு பாய, பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

படத்தின் காப்புரிமை AFP Getty

அவரை போலிசார் ஷெரீஃப் என அடையாளம் கண்டுள்ளனர்.

மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான அதிகரிக்கப்பட்ட கொலைகளுக்கு மூளையாக செயல்பட்டவர் ஷெரீஃப் என போலிசார் சந்தேகிக்கின்றனர்.

சனிக்கிழமை அன்று, போலிஸ் காவலில் இருந்த போது இஸ்லாமியவாதி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருடைய கூட்டளிகளை போலிசார் கைது செய்ய முயற்சியில் அழைத்து சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது.