பிரேசில் சுற்றுலா துறை முன்னாள் அமைச்சர் மேல் ஊழல் குற்றச்சாட்டு

  • 19 ஜூன் 2016

முன்னாள் சுற்றுலா துறை அமைச்சர் ஹென்ரிக் அல்விஸூக்கு எதிராக வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை வெள்ளையாக்கியது தொடர்பான முறையான குற்றச்சாட்டை பிரேசிலின் அரசு தலைமை வழக்கறிஞர் ரோட்ரிகோ ஐனாட் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை ABr

அரசுக்கு சொந்தமான பெட்ரோபிராஸ் எண்ணெய் நிறுவனத்தில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் வியாழக்கிழமை அல்விஸ் பதவி விலகினார்.

இந்த குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்து வருகிறார்.

ஸ்விட்சர்லாந்திலுள்ள அல்விஸ் வைத்திருக்கும் இரகசிய வங்கிக் கணக்கு பெட்ரோபிராஸ் ஊழல் திட்டத்திலிருந்து கையூட்டு வாங்க பயன்பட்டிருக்கலாம் என்று கூறுகின்ற சான்றுகளை வழங்கறிஞர்கள் வழங்கியுள்ளனர்.

இடைகால அதிபர் மைக்மேல் டெமர் ஒரு மாதத்திற்கு முன்னால் பொறுப்பேற்ற பிறகு, பதவி இறங்கியுள்ள மூன்றாவது அமைச்சரவை உறுப்பினர் அல்விஸ் ஆவார்.