பிரிட்டனில் மீண்டும் தொடங்கியது கருத்தறியும் வாக்கெடுப்பு பிரசாரங்கள்

  • 19 ஜூன் 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா, வெளியேற வேண்டுமா என்பதை அறிந்துகொள்வதற்காக, வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை, இரு தரப்பினரும் மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Reuters

கடந்த வியாழக்கிழமை, தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் கொல்லப்பட்டதையடுத்து இரு தரப்பினரும் தங்கள் பிரசாரங்களை இடைநிறுத்தி வைத்தனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்னும் பிரசாரத்தை முன்னெடுக்கும் பிரிவின் முக்கிய நபரான மைகல் கோவ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வாக்களிப்பது பிரிட்டன் மீது வைத்திருக்கும் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

தான் குடியேற்றத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஆனால் குடியேறிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்பதை அந்த மக்கள் உணர வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பிரதமர் டேவிட் கேமரன், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று முடிவெடுத்தால் பிரிட்டன் பத்து வருடங்கள் வரை பலவீனமான நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்படும் எனத் தெரிவித்தார்.