பிரிட்டன் இருத்தலியல் தெரிவை எதிர்கொள்கிறது - கேமரன்

  • 19 ஜூன் 2016

ஐரோப்பிய ஒன்றியத்தோடு தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா என்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் “இருத்தலியல் தெரிவை” பிரிட்டன் எதிர்கொள்கிறது என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty

எந்த முடிவை எடுத்தாலும் திரும்பி செல்வது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விலக வாக்களிப்பது பெரியதொரு தவறாக அமையும் என்று தெரிவித்திருக்கும் கேமரன், அது ஒரு தசாப்தம் வரை பலவீனமான ஸ்திரமின்மைக்கு வழிநடத்தும் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், பிரிட்டன் விலக வேண்டும் என்று பரப்புரை மேற்கொள்ளும் மைக்கேல் கோவ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகத்திற்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளார்.

கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸுக்கு அஞ்சலி செலுத்தம் வகையில், பிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க வேண்டும், வெளியேற வேண்டும் என கூறுகின்ற இருதரப்பிரும் மூன்று நாட்கள் பரப்புரையை இடைநிறுத்தி வைத்திருந்த பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளனர்.