ஈஜிப்ட்ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதம்: விசாரணையாளர்கள் தகவல்

  • 19 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Getty

கடந்த மாதம் பாரிஸிலிருந்து சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளான ஈஜிப்ட் ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதமடைந்ததாகவும், அதை சரி செய்ய அதிக நேரமும் முயற்சியும் தேவை என விமானத்தின் தகவல்கள் மற்றும் குரல் பதிவுகளை ஆராயும் எதிப்திய விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதை சரி செய்ய முடியுமா அல்லது அதை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்கு முன்னர், அதன் சேதத்தின் தீவிரத்தை விசாரணையாளர்கள் ஆய்வு செய்வார்கள் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈஜிப்ட்ஏர் விமானம், 60 பயணிகளுடன், மத்திய தரை கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.