அல்ஜீரியாவில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

  • 19 ஜூன் 2016

அல்ஜீரிய தலைநகரான அல்கியர்ஸின் தென் பகுதியில் ஆயுதம் தாங்கிய இஸ்லாமியவாத தீவிரவாதிகள் எட்டு பேரைகொன்றுவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

மெடியா என்ற மலைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட இந்த தீவிரவாதிகள் எந்த குழுவை சேர்ந்தவர்கள் என்பது ராணுவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் ஆகிய இரு குழுக்களுக்கும் ஆதரவாக செயல்பட்டு வரும் போராளிகள் அல்ஜீரியாவின் உள் பகுதிகளில் செயல்பட்டு வருகிறார்கள்.