பலூஜா நகரில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 350 நபர்கள்: இராக் படையினரால் விடுவிப்பு

  • 19 ஜூன் 2016

பலூஜா நகரில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளால், சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 350 நபர்களை இராக் பாதுகாப்பு படையினர் விடுவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

விடுவிக்கப்பட்ட சிறைக்கைதிகள் பசியாலும், தாகத்தாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பலூஜா நகரம், இரண்டு ஆண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்தது.

தற்போது இராக் ராணுவம் நகரின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றிவிட்டனர் இருப்பினும் அங்கு அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர்.

நேற்று இரவில் நடந்த இரண்டு தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன, இருப்பினும் அத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை.