நூறு போயிங் விமானங்களை வாங்க போவதாக இரான் அறிவிப்பு

போயிங் என்ற அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து 100 விமானங்களை வாங்க போவதாக இரான் விமானத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

படத்தின் காப்புரிமை Reuters

கடந்த ஆண்டு உருவான இரான் அணு திட்ட உடன்பாட்டிற்கு பின்னர், இரான் மீதான தடைகளில் பாதியை நீக்கிய அமெரிக்கா, போயிங் நிறுவனம் இரானோடு பேச்சுவார்த்தைகளை தொடங்க பிப்ரவரி மாதம் அனுமதித்தது.

விமானச் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக அதனுடைய பழைய விமானங்களை மாற்றிவிடுவதில் இரான் முனைப்பாக இருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP Getty Images

ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ்சிடம் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட விமானங்களை வாங்க ஜனவரி மாதம் இரான் உடன்படிக்கையை உருவாக்கியது.

இரானின் தேசிய விமானப் போக்குவரத்து சேவையின் இரான் ஏர் விமானங்களை பாதுகாப்பு தடை பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஆட்சியாளர்கள் நீக்கியிருப்பதன் மூலம் ஐரோப்பிய வான்பரப்பில் அவை பறப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.