''தற்கொலை செய்ய எண்ணினேன்'': ஹாங் காங் புத்தக விற்பனையாளர் லாம் விங் கீ

சீன அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹாங் காங் புத்தக விற்பனையாளர், தான் தற்கொலை செய்து கொள்ள கருதியதாக பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

தான் எட்டு மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட போது, தீவிர மன ரீதியிலான சித்திரவதைகளை அனுபவித்ததாக லாம் விங் கீ தெரிவித்துள்ளார்.

தனது வழக்கறிஞரை சந்திக்கும் உரிமையை விட்டுக் கொடுக்க தான் நிர்பந்திக்கப்பட்டதாக ஏற்கெனவே லாம் விங் கீ முன்னர் தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை AP

சீனாவில் சிறை வைக்கப்பட்ட ஐந்து புத்தக விற்பனையாளர்களில் லாம் விங் கீயும் ஒருவர்.

கடந்தவாரம் ஹாங் காங் திரும்பிய லாம் விங் கீ, சிறையில் தான் அனுபவித்த கொடூர சித்திரவதைகளை வெளிப்படுத்தினார்.

சீனா தலைவர்கள் குறித்த உறுதிப்படுத்தாத தகவல்களை கொண்ட புத்தகங்களை விற்பனை செய்ததற்காக அந்த ஐவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக பலரும் நம்பினார்கள்.