ஒக்கினாவா தீவில் இரண்டு தசாப்தங்களில் மிக பெரிய பேரணி

ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்ட, இரண்டு தசாப்தங்களில் நடைபெற்ற பெரிய பேரணிகளில் ஒன்று ஜப்பானிய தீவான ஒக்கினாவாவில் நடைபெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்க இராணுவம் அங்கு நிலைகொண்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

அந்த தீவில் வாழ்கின்ற அமெரிக்க முன்னாள் கடற்படையினர் ஒருவர் உள்ளூர் இளம் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்திருப்பது போராட்டக்காரர்களிடம் கோபத்தை மூட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை GETTY

இந்த தீவில் அமெரிக்கர்கள் நிலைகொண்டிருப்பதற்கு ஏற்கெனவே இருந்த பரவலான எதிர்ப்பை இந்த சம்பவம் மீண்டும் எழுச்சிபெற செய்திருக்கிறது.

அமெரிக்க கடற்படையினர் பயன்படுத்துகின்ற ஒரு வசதியை மாற்றுவதற்கான திட்டம் உள்ளூர் போராட்டங்களால் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தடைப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..